2025 ஜூலை 19, சனிக்கிழமை

19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 27 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 19 வயதுப் பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் இறுதி ஆட்டத்தில் விளையாட மானிப்பாய் மகளிர் கல்லூரியும் இளவாலை சென்ஜோசப் மகா வித்தியாலயமும் தகுதிபெற்றுள்ளன.

மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று திங்கட்கிழமை அரையிறுதி ஆட்டங்கள் இடம்பெற்றன.

மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையே இடம்பெற்ற போட்டியில் முதல் பாதி ஆட்டத்தில்   மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒரு கோலை அடித்த நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிவடைந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்திலும்  மேலும் ஒரு கோலை மானிப்பாய் இந்துக் கல்லூரி அடித்த நிலையில் இரண்டாம் பாதி ஆட்டம் முடிவடைந்தது. ஆட்ட நிறைவில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 02க்கு 00 என்ற கோல்கணக்கில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியை வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

மற்றுமொரு அரையிறுதி ஆட்டத்தில் மாதகல் சென்ஜோசப் மகா வித்தியாலயமும் மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையும் மோதிக்கொண்டன.

முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு கோல்களைப் பெற்று முன்னிலையில் இருந்த சென்ஜோசப் மகா வித்தியாலயம் இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேலும் இரண்டு கோல்களை பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவு பெற்றது. ஆட்ட நிறைவில் மாதகல் சென்ஜோசப் மகா வித்தியாலயம் 04க்கு 00 என்ற கோல் கணக்கில் மல்லாகம் குளமங்கால் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையை வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X