2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அகில இலங்கை 'கூடோ' சம்பியன்ஷிப்

Kogilavani   / 2011 மே 03 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தற்காப்பு கலைகளில் ஒன்றான கூடோ (மரனழ)   கலையின் சர்வதேச சங்கத்தின் இலங்கைக் கிளை அகில இலங்கை ரீதியாக ஒழுங்கு செய்த போட்டிகள்  வார இறுதியில் நுவரெலியாவில் இடம்பெற்றன.

நுவரெலிய உள்ளக விளையாட்டு அரங்கில் இடம் பெற்ற இப்போட்டிகளில் பிரதம அதிதியாக இலங்கை இரானுவத்தின் நுவரெலிய மாவட்ட சிங்க ரெஜிமண்டின் கட்டளையிடும் அதிகாரி திலக் அமுனுகம கலந்து கொண்டார்.

இப் போட்டிகளின் இறுதியில் சிறந்த வீரராக எம்.சப்தார் அலியும், சிறந்த வீராங்கனையாக செல்வி திலினி மாரசிங்கவும் தெரிவாகினர்.

இப்போட்டி இலங்கை கூடோ சங்கத்தின் தலைவரும் தெற்காசியாவிற்கான பிரதம கூடோ போதனாசிரியருமான ஷிஹான் ஜே.மொஹமட் மொஹிதீனின் வழிகாட்டலில் இடம் பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X