2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வாகரை பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா

A.P.Mathan   / 2011 மே 10 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 23ஆவது இளைஞர் விளையாட்டு விழாவின் வாகரைப் பிரதேச மட்ட இளைஞர் கழக விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞர் சேவை உத்தியோகஸ்தர் என்.குகேந்திரா தலைமையில் இடம்பெற்றது.

கதிரவெளி விக்நேஸ்வரா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற இவ் விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் விசேட விருந்தினராக உதவிப் பணிப்பாளர் ஏ.ஜீ.ஏ.கபூர் மற்றும் சுதந்நிரக் கட்சி அமைப்பாளர் பி.மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சுவட்டு மைதான நிகழ்ச்சிகளுக்கு அப்பால் சாகஜ நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X