2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரீடாசக்தி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி

Suganthini Ratnam   / 2011 மே 13 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

கிரீடாசக்தி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 13 விளையாட்டுக்கழங்களிலிருந்தும் தலா 100 பேர் என்ற அடிப்படையில் 1,300 வீர, வீராங்கணைகள்  தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் 14ஆம் 15ஆம் திகதிகளில் இவர்களுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது.  

விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் பயிற்சி முகாமிற்கு வடமாகாண விளையாட்டுத்துறை திணைக்களம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக விளையாட்டு அலுவலர் எஸ்.தனுராஜ் தெரிவித்தார்.

பயிற்சி காலத்தில் திறமையாக செயற்படும் வீரர்களில் ஒவ்வொரு விளையாட்டுத் துறையிலும் 25 பேர்  இருபாலரும் தெரிவு செய்யப்படுவார்கள். இவர்கள் முறையே இரண்டாம் நாள் விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டு அதிலிருந்தும் ஒவ்வொரு விளையாட்டுத்துறையிலும் 15 பேராக மொத்தம் 400 பேர் தெரிவு செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டு அணி  உருவாக்கப்படும். இவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சினால் மாதாந்தம் ஆயிரம் உதவி தொகை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X