2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கரப்பந்தாட்ட போட்டியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மாவட்ட செம்பியன்

Kogilavani   / 2011 மே 13 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
யாழ். மாவட்ட கல்வி வலயப் பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற 15 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் வடமராட்சி உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மல்லாகம் மகா வித்தியால மைதானத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இப்போட்டியில் வலிகாமம் வாவிளான் மத்திய மகா வித்தியாலயமும் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியும் மோதிக்கொண்டன.

மூன்று சுற்றுக்கள் கொண்ட இந்தப் போட்டியில் முதல் இரண்டு சுற்றுக்களில் 25:22,  25:13 என்ற புள்ளிகளின்  அடிப்படையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி வெற்றி பெற்று யாழ். மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மூன்றாம் இடத்திற்கான போட்டியில்  சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும்  சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியும் மோதின.

மூன்று சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியில் முதல் மற்றும் மூன்றாம் சுற்றுக்களை விக்ரோறியாக் கல்லூரி 25:21,  25:20 என்ற  புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற இரண்டாம் சுற்றை சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி 25:15 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது

ஆட்ட நிறைவில் விக்ரோறியாக் கல்லூரி 2:1 என்ற சுற்றுகள் அடிப்படையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியை வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

அடுத்த சுற்றாக இடம்பெறவுள்ள மாவட்ட மட்டப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற அணிகளும் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X