2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா

Menaka Mookandi   / 2011 மே 18 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சின் அனுசரணையுடன் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா இன்று புதன்கிழமை அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகிறது.

அட்டாளைச்சேனை இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் யு.எல்.மஜீத் தலைமையில் இடம்பெறும் இவ்விளையாட்டு விழாவில் 15 இளைஞர் கழகங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இன்றைய விளையாட்டு விழாவில் சுமார் 16 மெய்வல்லுநர் போட்டி நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

மேற்படி விளையாட்டு விழாவில், அட்டாளைச்சேனை இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.எல்.அஜ்மல் மற்றும் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.அஸ்லம் சஜா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X