2025 ஜூலை 19, சனிக்கிழமை

நானாட்டான் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள்

Kogilavani   / 2011 மே 28 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையேயான தடகள விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1  மணிக்கு நானாட்டான் பிரதேச சபை பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பிரதேச செயலாளர் சி.சந்தியையா தலைமையில் நடைபெறவுள்ள  இந் நிகழ்வில் நானாட்டான் பிரதேசசபைத் தலைவர் எ.ஆர்.அன்புராஜ் லெம்பேட் பிரதம விருந்தினராகவும்,  நானாட்டான் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள 542 படைகளின் கட்டளைத்தளபதி கேணல் பிக்கும்லியனகே, நானாட்டான் வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி எஸ்.சிவபாலன் ஆகியோர்  சிறப்பு விருந்தினர்களாகவும், வர்த்தகர் ஜே.இம்மானுவேல் பிள்ளை கௌரவ விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X