Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மே 29 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிண்ணியா அல்-ஹிறா விளையாட்டுக் கழகத்தின் 3 ஆவது வருட நினைவாக நடத்தப்பட்ட 6 ஓவர் 8 பேர் கொண்ட கிரிக்கட் சுற்றுப் போட்டியில் கிண்ணியா முரட்டுச் சிங்கம் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இப்போட்டி கிண்ணியா அல்-ஹிறா விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் கே.ஜே.கே.ஜகுபர் தலைமையில் இடம்பெற்றது.
20 அணிகள் பங்கு பற்றிய இச் சுற்றுப் போட்டியில் கிண்ணியா அல்- கைதா அணியும், முரட்டு சிங்கம் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அல்-கைதா அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 65 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முரட்டுச் சிங்கம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 78 ஓட்டங்களை பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் உப செயலாளர் திலகஸ்ரீ, , ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், ஆலோசகருமான எம்.பீ.முஹம்மட் ஹில்மி மற்றும் சேருவல தொகுதி அமைப்பாளர் என்.சிஹான், ஜமாஅதே இஸ்லாமி திருமலை பிராந்திய தலைவர் எம்.நிஜாம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
19 minute ago
25 minute ago
29 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
29 minute ago
8 hours ago