2025 ஜூலை 19, சனிக்கிழமை

மட்டு. மாவட்ட பாடசாலை மட்ட விளையாட்டு போட்டியில் மட்டு கல்வி வலயம் சம்பியன்

Super User   / 2011 மே 30 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, வதனகுமார்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நான்கு கல்வி வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாவட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் 874 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு கல்வி வலயம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இவ்விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் திருமதி பவளகாந்தன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள், கோட்ட கல்வி அதிகாரிகள்,  அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நான்கு கல்வி வலயங்களிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் பங்கு பற்றின.

இவ்விளையாட்டுப்போட்டியில் 713 புள்ளிகளை பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் இரண்டாமிடத்தினையும் 463 புள்ளிகளை பெற்று கல்குடா கல்வி வலயம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X