2025 ஜூலை 19, சனிக்கிழமை

எல்லே போட்டியில் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 01 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே நடத்திய பெண்களுக்கான எல்லே போட்டியில் வடமராட்சி மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு யாழ். மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பருத்தித்துறை  பிரதேச செயலக அணியும் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் அணியும் மோதின.

ஆட்டநிறைவில் மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பிரிவு 8க்கு 7 புள்ளிகள் என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X