2025 ஜூலை 19, சனிக்கிழமை

பாடசாலைகளுக்கிடையிலான ரகர் போட்டியில் தர்மராஜ கல்லூரி வெற்றி

Kogilavani   / 2011 ஜூன் 03 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி தர்மராஜ கல்லூரிக்கும் கல்கிஸ்ஸை சயன்ஸ் (விஞ்ஞான) கல்லூரிக்கும் இடையில்  இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான ரகர் போட்டியில் 22-19 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி தர்மராஜ கல்லூரி வெற்றி பெற்றது.

கண்டி போகம்பறை மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியின் முதற் பகுதி முடிவடையும் போது கண்டி தர்மராஜ கல்லூரி 07 - 00 என்ற புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.

போட்டியின் இரண்டாம் பகுதியில் சயன்ஸ் கல்லூரி வீரர்கள் திறமையாக விளையாடி 19 புள்ளிகளை பெற்றனர். தர்மராஜ கல்லூரி வீரர்கள் அவர்களுடைய கடும் சவாலுக்கு மத்தியில் 22 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றனர்.

தர்மராஜ கல்லூரி சார்பில் திலின வீரசிங்க, எம்.பீ உடங்கமுவ, கே.வீ.ஹெட்டியாரச்சி ஆகிய வீரர்களும் விஞ்ஞான கல்லூரி சார்பில் எம்.எச்.மதுரங்க, அன்ட்ரூ பிரட்லி, ரிசட் தர்மதாச, அசான் மலிக் ஆகிய வீர்ரகளும் புள்ளிகளை பெற்றுக் கொடுத்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X