2025 ஜூலை 19, சனிக்கிழமை

புத்தளத்தில் தேசிய விளையாட்டு விழா

Menaka Mookandi   / 2011 ஜூன் 03 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.மும்தாஜ்)

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள  37ஆவது தேசிய விளையாட்டு போட்டி நாளை சனிக்கிழமை புத்தளத்தில் இடம்பெறுகின்றது.

நாளைய தினம் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழாவின் நிகழ்வுகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன், வடமேல் மாகாண விளையாட்டுத் துறை அமைச்சர் அசோக வடிகமங்காவ மற்றும் புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாளைய  நிகழ்வுகளில் வீதி ஓட்டம், ஒட்ட நடை போட்டி, ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி, பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி ஆகியன இடம்பெறவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X