2025 ஜூலை 19, சனிக்கிழமை

வேல்ஸ் கழகத்தின் இருபதுக்கு இருபது சுற்றுப்போட்டி

Suganthini Ratnam   / 2011 ஜூன் 05 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை, வேல்ஸ் கழகம் நடத்திய  இருபதுக்கு இருபது  சுற்றுப்போட்டியில அரையிறுதி ஆட்டங்களில் யங் ஒலிம்பிக்கஸ் கழகமும் சோடிய விளையாட்டுக் கழகமும் வெற்றி பெற்றுள்ளன. நேற்று சனிக்கிழமை இப்போட்டிகள் வேல்ஸ் கழக ஆடுதிடலில் நடைபெற்றது.

நேற்று காலை நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பென்ஸ் கழகத்தை எதிர்த்து யங் ஒலிம்பிக்ஸ் கழகம் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்பென்ஸ கழகம் 6 விக்ன்கட் இழப்பிற்கு 117 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு விளையாடிய யங் ஒலிம்பிக்ஸ் கழகம் 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ஓட்டங்களைப் பெற்று  5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றனர்.

மாலை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வேல்ஸ் கழகத்தை எதிர்த்து சோடியக் கழகம் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய சோடியக் கழகம் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றது.  பதிலுக்கு விளையாடிய வேல்ஸ் கழகம் 17 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். இதன் மூலம் சோடியக் கழகம் 42 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை  நண்பகல் யங் ஒலிம்பிக்ஸ் கழகத்தை எதிர்த்து சோடியக் விளையாட்டுக் கழகம் மோதவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X