2025 ஜூலை 19, சனிக்கிழமை

டி.எஸ்.ஐ. சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

Super User   / 2011 ஜூன் 08 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

"டி.எஸ்.ஐ. சுப்பர்ஸ்போர்ட் பாடசாலைகள் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி" ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 13 ஆவது தடவையாக நடத்தப்படுகின்ற இச்சுற்றுப்போட்டி ஜூலை மாத இறுதியில் முடிவடையும்.

14. 16. 18, வயதுக்குட்பட்ட ஆண், பெண் அணிகளுக்கிடையில் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் 4802 அணிகளைச் சேர்ந்த சுமார் 60,000 போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இலங்கை கரப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவரான அமைச்சர் திலான் பெரேரா விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே மற்றும் டி.எஸ்.ஐ. நிறுவன அதிகாரிகள் உட்பட பலர்  கலந்துகொண்டனர். (Pix by : Pradeep Pathirana)


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X