Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜூன் 12 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வடமாகாண கல்வி வலயங்களுக்குட்பட்ட பாடசாலை வீரர்களுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான அரை மரதனோட்டப் போட்டியில் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் நெலுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த நாகநாதன் சாந்தரூபன் 1:15:22 செக்கனில் ஓடி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.45 மணிக்கு கோப்பாய் பிரதேச செயலக முன்றலிருந்து ஆரம்பமான 21 கிலோ மீற்றர் தூரத்தையுடையதான இந்த மரதனோட்டம், கரவெட்டி பிரதேச சபை முன்றலில் நிறைவு பெற்றது. 41 வீரர்கள் வடமாகாணத்திற்;குட்பட்ட 12 கல்வி வலயங்களிலிருந்தும் கலந்து கொண்டார்கள்.
போட்டியில் முதல் பத்து இடங்களைப் பெற்ற வீரர்களின் விபரங்கள் வருமாறு:-
முதலாமிடம் - நாகநாதன் சாந்த ரூபன் (வவுனியா நெலுக்குளம் மகாவித்தியாலயம்)
இரண்டாமிடம் - தேவன் தேவராஜ் (முல்லைத்தீவு கற்சிலைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை)
மூன்றாமிடம் - இராசேந்திரன் பிரசாந்தன் (கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை)
நான்காமிடம் - இராஜசுரேந்திரன் சாந்தன் (வவுனியா வடக்கு சுந்தரபுரம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை)
ஐந்தாமிடம் - ஜெயக்குமார் ஜெராட் டிலோஜன் (கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை)
ஆறாமிடம் - கண்ணன் சுதர்சன் (மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி)
ஏழாமிடம் - விஷ்னுகாந்தி பிரவேந்தன் (வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம்)
எட்டாமிடம் - கே.தர்சன் (வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம்)
ஒன்பதாமிடம் - எஸ். செபஸ்ரீன் சில்வா (மன்னார் புனித வளனார் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை)
பத்தாமிடம் - ஜெயராசா யோகராசா (வடமராட்சி தொண்டமானாறு வீரகத்தி வித்தியாலயம்)
3 minute ago
13 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
13 minute ago
8 hours ago