Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 12 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வட மாகாண கல்வித் தினைக்களத்தினால் வட மாகாண பாடசாலைகளின் வீராங்கனைகளுக்கு இடையே இன்று காலை நடத்திய 16-19 வயதுக்கு இடைப்பட்ட வீராங்கனைகளுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சோந்த பாரதி வித்தியாலய மாணவி பி.விமலாதேவி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
வட மாகாண கல்வித் தினைக்களத்தினால் முதல் தடவையாக அரை மரதன் ஓட்டப்போட்டி இன்று நடத்தப்பட்டது. வட மாகாணத்திறக்கு உட்பட்ட பன்னிரெண்டு கல்வி வலயங்களில் இருந்து 27 வீராங்கனைகள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஓட்டப்போட்டி கரவெட்டி பிரதேச சபை முன்றலில் முடிவடைந்தது. இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வட மாகாண உடற்கல்விப் பணிப்பாளர் கே.சத்தியபாலன் மேற்கொண்டு இருந்தார்.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பத்து இடங்களைப் பெற்ற வீராங்கனைகளின் விபரங்கள் வருமாறு:
முதலாம் இடம்: பி.விமலாதேவி (கிளிநொச்சி பாரதி வித்தியாலயம் .(1:37:06)
இரண்டாம் இடம்: சிவசுப்பிரமணியம் தீபா (கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயம். (1:38:20)
மூன்றாம் இடம்: இராஜசுரேந்திரன் சாலினி (வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை (1:39:10)
நான்காம் இடம்: யேசுதாசன் மரியகொறற்றி யாழ் எழுவை தீவு முருகவேள் வித்தியாலயம். (1:42:10)
ஐந்தாம் இடம்: முருகையா ஜெயந்தினி (கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு, அரசினர் தமிழ் கலவன் பாடசாலை(1:43:40)
ஆறாம் இடம்: ஜெ.வனோஜா (வவுனியா கல்மடு மகா வித்தியாலயம்)
ஏழாம் இடம்: எஸ். மேரி சுஸ்மிதா டயஸ் (மன்னார் புனித வளனார் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை.
ஏட்டாம் இடம்: ஏ.ரேணுகா (கொடிகாமம் கச்சாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை)
ஓன்பதாம் இடம்: ஏ.அனா (மன்னார் எழுத்தூர் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை)
பத்தாம் இடம்: பி.ரேனுகா (வவுனியா ஓமந்தை மகா வித்தியாலயம்)
12 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
8 hours ago