2025 ஜூலை 19, சனிக்கிழமை

கண்டி உதைப்பந்தாட்ட சங்கம் நடத்தும் உதைப்பந்தாட்ட போட்டி

Kogilavani   / 2011 ஜூன் 15 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி உதைப்பந்தாட்ட சங்கம் நடத்தும் உதைப் பந்தாட்ட லீக் தொடரின் முதலாவது போட்டி நேற்று புதன்கிழமை கண்டி போகம்பறை மைதானத்தில் ஆரம்பமானது.

இதன் முதற் போட்டியில் கண்டி கென்னடி விளையாட்டுக் கழகமும் கண்டி தென்னேகும்புர றிலயன்ஸ் விளையாட்டு கழகமும் பங்குக் கொண்டன.

இதில் றிலயன்ஸ் கழகம் 6:1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

இடைவேளையின் போது 4:1 என்ற அடிப்படையில் றிலயன்ஸ் கழகம் முன்னிலை வகித்தது.

றிலயன்ஸ் கழகம் சார்பாக மொகமட் கியாஸ், எம்.சப்ரி, ஏ.பூஜரி ஆகியோர் தலா 2 கோல் வீதம் பெற்றனர்.

இதன்போது மடவளை ஹைரா குறூப் நிறுவனத்தின் தலைவர் யு.எம்.பாஸில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X