2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றவுள்ள யாழ். மாணவன்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கோண்டாவில் சிவபூமி மாணவன் சி.துஷ்யந்தன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கு தெரிவாகியுள்ளார். நாளை மறுதினம் 19ஆம் திகதி கிறீஸ் நாட்டின் ஏதேன்ஸ் நகரில் நடைபெறவுள்ள மாற்றுவலுவடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் இலங்கையிலிருந்து ஆறு வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்ற நா.எதிர்வீரசிங்கத்திற்குப் பின்னர் இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போட்டிக்குத் தெரிவான தமிழ் இளைஞன் சி.துஷ்யந்தன் ஆவார்.

100 மீற்றர் ஓட்டம், 400 மீற்றர் 100 மீற்றர் அஞ்சல் ஒட்டம் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் இவர் பங்குபற்றவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X