2025 ஜூலை 19, சனிக்கிழமை

மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரி இல்ல விளையாட்டுப் போட்டி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று வியாழக்கிழமை மூதூர் பொது மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் யூ.என்.கபூர் தலைமையில் இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டியில்  பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளருமான எம்.எஸ்.தௌபீக் கலந்து கொண்டார். அத்துடன் மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ், உதவிக்கல்விப் பணிப்பாளர் எச்.எம்.உஸ்மான், மூதூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.பி.நஸீர், பி.ரி.எம்.பைஸர்  உட்பட பெருந்திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

'கிறீன் வொரியஸ்', 'புளு சளஞ்சஸ்', ' ரெட் ரோயல்' ஆகிய இல்லங்களுக்கிடையே இடம்பெற்ற போட்டிகளில் அதிக திறமையைக் காட்டிய 'புளு சளஞ்சஸ்' முதலாமிடத்தை சுவிகரித்துக் கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X