2025 ஜூலை 19, சனிக்கிழமை

சம்மாந்துறை சென்நெல் ஸாஹிறா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப்போட்டி

Kogilavani   / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை சென்நெல் ஸாஹிறா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று  வியாழக்கிழமை நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.மீராமுகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன, கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் கவிஞர் எச்.எம்.பாறுக், பிரதேச சபை உறுப்பினர் முகைதீன் (றியால்) உட்பட அதிபர்கள் ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சன், மூன், ஸ்டார் ஆகிய மூன்று இல்லங்கள் பங்குபற்றிய இவ்விளையாட்டுப்போட்டியில் 461 புள்ளிகளைப்பெற்று சன் இல்லம் முதலாம் இடத்தையும், 414 புள்ளிகளைப்பெற்று மூன் இல்லம் இரண்டாம் இடத்தையும், 412 புள்ளிகளைப்பெற்று ஸ்டார் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X