2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலய மெய்வன்னமைப் போட்டி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணியம் வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வன்னமைப் போட்டிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் திருமதி பா.விஜயகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ள  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மானிப்பாய் தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையாளர்  கனகராசா சிவகுமாரன், திருமதி சிவரூபி சிவகுமாரனும் கலந்துகொள்ளவுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையின் அதிபர் ந.சிவகடாட்சம், வலிகாமம் கல்வி வலயத்தின் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் ஆ.வ.கணேசலிங்கம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.  


  Comments - 0

  • சிவா Sunday, 13 October 2013 11:36 AM

    ஆனைக்கோட்டை பற்றிய விடையங்கள் மேலும் அறித்தரவும்... நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X