2025 ஜூலை 19, சனிக்கிழமை

பட்டணமும் சூழலும் பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் மனையாவெளி கழகம் சம்பியன்

Kogilavani   / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கஜன்)

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச இளைஞர் கழகங்களுக்கு இடையே தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மனையாவெளி இளைஞர் கழகம் சம்பியனானது. இறுதிப்போட்டியில் சீனக்குடா மனவ்றா இளைஞர் கழகத்தை மனையாவெளி இளைஞர் கழகம் வெற்றி கொண்டது. 

இதேவேளை கால்பந்தாட்டப் போட்டியிலும் இக்கழகம் சம்பியனானது. பெண்களுக்கான கரப்பந்தாட்டம் போட்டியில் ரோயல் இளைஞர் கழகம் சம்பியனானதுடன்  மனையாவெளி இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. 

ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில்  வில்லூண்டி இளைஞர் கழகம் சம்பியனானதுடன்  மனவ்றா இளைஞர் கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டது. வலைப்பந்தாட்டப் போட்டியில் வில்லூண்டி இளைஞர்கழகம் சம்பியனானதுடன் மனையாவெளி இளைஞர் கழகம் இரண்டாமிடத்தைப் பெற்றது.

கால்பந்தாட்ட இறுதிப்போட்டி  மெக்கெய்சர் மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மனையாவெளி இளைஞர் கழகத்திற்கும் வில்லூண்டி இளைஞர் கழகத்திற்கும் இடையே நடைபெற்றது. இடைவேளை  வரை இரு அணிகளும் எந்த கோல்களையும் பெறவில்லை.

இடைவேளைக்குப் பின்னர் மூன்றாவது நிமிடத்தில் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு  ஏற்பட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. அதன்பின் தொடர்ந்த விளையாட்டில் வில்லூண்டி கழகம் சம்மதிக்காமல் மைதானத்தை விட்டு வெளியேறியது. இதனால் மனையாவெளி கழகம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

வெற்றி பெற்ற இளைஞர் கழகத்திற்கு  சுசந்த புஞ்சிநிலமே கிண்ணமும், விளையாட்டுச் சீருடைகளும்  பரிசாக வழங்கப்பட்டன.

வலைப்பந்து போட்டியில் மனையாவெளி இளைஞர் கழகத்தைச் சேர்நத ம.டினூஜா சிறந்த வீராங்கனையாகவும். கிரிக்கெட் போட்டியில் அதேகழகத்தைச் சேர்ந்த கு.சக்திபிரணவன் சிறந்த விளையாட்டு வீரராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

கடற்தொழில் நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சநிலமே பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X