2025 ஜூலை 19, சனிக்கிழமை

திருகோணமலை பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப்போட்டி

Kogilavani   / 2012 பெப்ரவரி 29 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

 

திருகோணமலை பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப்போட்டி இனறு செவ்வாய்க்கிழமை புனித மரியாள் கல்லூரி மனைப்பொருளியல் மண்டபத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில், 15 - 19வயதுக்குட்பட்ட ஆண் பெண்கள் கலந்துகொண்டனர்.

கோட்டக்கல்வி பணிப்பாளர் க.அரியநாயகம் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் 15 வயது பெண்கள் பிரிவில்  ஸ்ரீP சண்மக இந்துமகளிர் கல்லூரி முதலிடத்தினையும்; புனித மரியாள் கல்லூரி இரண்டாம் இடத்தினையும் ஆண்கள் பிரிவில் உவர்மலை விவேகாநந்தா கல்லூரி முதலிடத்தினையும் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

19 வயது பிரிவு பெண்கள் பிரிவில் புனித மரியாள் கல்லூரி முதலிடத்தினையும் சண்முகா இந்து மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தினையும் ஆண்கள் பிரிவில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி முதலிடத்தினையும் புனித சூசையப்பர் கல்லூரி இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X