2025 ஜூலை 19, சனிக்கிழமை

குச்சவெளி பிரதேச செயலக விளையாட்டு போட்டியில் அல் - ஹம்றா விளையாட்டு கழகம் சம்பியன்

Super User   / 2012 மார்ச் 03 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

குச்சவெளி பிரதேச செயலக விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான மெய்வல்லுநர் போட்டியில் இறக்கண்டி அல் - ஹம்றா விளையாட்டு கழகம் சம்பியனாகியது.

ஆண்ளுக்கான போட்டிகளில் அல் - ஹம்றா விளையாட்டு கழகம் சம்பியனாகிய நிலையில் குச்சவெளி அல் – பைன் விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

பெண்களுக்கான விளையாட்டு போட்டிகளில் குச்சவெளி கலைமகள் விளையாட்டு கழகம் சம்பியனாகிய நிலையில் அல் – ஹம்றா விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

குச்சவெளி பிரதேச  செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராஜா பிரதம அதிதியாக கலந்துசிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X