Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 மார்ச் 05 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையே இடம்பெற்ற ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் அளவெட்டி மத்தி விளையாட்டு கழகம் சம்பியனாகியுள்ளது.
மல்லாகம் ஸ்ரீ பாஸ்கரன் விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மல்லாகம் கிராம அபிவிருத்தி சங்கமும் அளவெட்டி மத்தி விளையாட்டு கழகமும் மோதிக்கொண்டன.
முதலில் துடுப்பெடுத்தாடிய மல்லாகம் கிராம அபிவிருத்தி சங்க அணி 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இவ் அணியில் துடுப்பெடுத்தாடிய யதீசன் ஆட்மிழக்காது; உள்ளடங்களாக 29 ஓட்டத்தையும், ரகீம் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அளவெட்டி மத்தி விளையாட்டு கழகத்தைச்சேர்ந்த அஜித் ஒரு ஓவரி பந்து வீசி 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
பதிலுக்க துடுப்பெடுத்தாடிய அளவெட்டி மத்தி விளையாட்டு கழகம் மூன்று ஒவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 58 ஒட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இவ்வணியில், அஜித் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் தயாளன் 10 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மல்லாகம் கிராம அபிவிருத்தி சங்க விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த கஜேந்திரன் ஒரு ஓவா பந்து வீசி 2 ஓட்டங்களுக்க ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
32 minute ago
38 minute ago
42 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
38 minute ago
42 minute ago
9 hours ago