2025 ஜூலை 19, சனிக்கிழமை

வடக்கில் பெரும் போர் என வர்ணிக்கப்படும் இரு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

Kogilavani   / 2012 மார்ச் 08 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கவிசுகி)

 

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும் புனித பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளதாக விளையாட்டு ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.

106 ஆவது தடவையாக நடைபெறும் மூன்று நாட்களை கொண்ட இக் கிரிக்கெட் போட்டி யாழ்.மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று காலை ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் மத்திய கல்லூரி அணிக்கு தங்கராஜா கோகுலனும், புனித பரியோவான் கல்லூரி அணிக்கு ஜேசுதாசன் அட்ரியனும் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் பிரகாரம் புனித பரியோவான் கல்லூரி அணி 33 போட்டிகளிலும், யாழ் மத்திய கல்லூரி அணி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

யாழ் மத்திய கல்லூரி அணிக்கு எஸ். சுரேஷ் மோகனும், புனித பரியோவான் கல்லூரி அணிக்கு எஸ்.லவேந்திரனும் பயிற்றுவிப்பாளர்களாக செயற்படுகின்றனர் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X