2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஜீ.டப்ளியூ.பிரபாகரன் ஞாபகார்த்த கால்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு மைக்கல் மன் கழகம் வெற்றி

Kogilavani   / 2012 மார்ச் 08 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

 

 

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்த்த சங்கம் மட்டக்களப்பு கால்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நடத்திய 2011ஆம் ஆண்டுக்கான ஜீ.டப்ளியூ. பிரபாகரன் ஞாபகார்த்த சவால் கிண்ணத்துக்கான கால்ப்பந்தாட்டப் போட்டியில் மட்டக்களப்பு மைக்கல் மன் கழகம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், மட்டக்களப்பு மைக்கல் மன் விளையாட்டுக் கழகமும், ஏறாவூர் இளம்தாரகை (வை.எஸ்.எஸ்.சி) விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.
இச்சுற்றுப் போட்டியில் 16 கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட மத்தியஸ்த்த சங்கத்தின் தலைவர் ஏ.ஏ.சுபேர்ஸ் தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன்கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயகுமார், கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்தந்தை ஏ.ஏ.நவரெத்னம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், விசேட அதிதிகளாக மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் என்.ரி.பாரூக் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுவரும் ஜீ.டப்ளியூ. பிரபாகரன் ஞாபகார்த்த சவால்கிண்ணத்துக்கான் போட்டி கடந்த 2011ஆம் ஆண்டு யூலை மாதத்தில் நடத்தப்பட்ட போதும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக இறுதிப் பொட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டடிருந்தது.

அதனால் இறுதி போட்டி நேற்று புதன்கிழமை நடத்தப்பட்டது என கால்பந்தாட்ட மத்தியஸ்த சங்கத்தின் பொருளாளர் மேர்வின் தெரிவித்தார்.

இதேநேரம் நேற்று புதன் கிழமை காலை தண்டனை உதை மூலமான ஜீ.டப்ளியூ. பிரபாகரன் ஞாபகார்த்த சவால்கிண்ணத்துக்கான போட்டி நடைபெற்றது.

23 கழகங்கள் பங்கு கொண்ட இப் போட்டியில் ஏறாவூர் இளம்தாரகை (வை.எஸ்.எஸ்.சி) விளையாட்டுக் கழகமும் மட்டக்களப்பு இக்னேசியஸ் விளையாட்டுக் கழகமும் மோதிகொண்டன.

இப்போட்டியில், ஏறாவூர் இளம்தாரகை (வை.எஸ்.எஸ்.சி) விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றது. இதன்நிறைவு விழாவில், தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியில் பங்குபற்றி பதக்கம் பெற்ற வீரர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் பெண் கால்பந்தாட்ட மத்தியஸ்தர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X