2025 ஜூலை 19, சனிக்கிழமை

கால்பந்தாட்டப் போட்டியில் வங்காலை சென்ஆன்ஸ் விளையாட்டுக்கழகம் சம்பியன்

Kogilavani   / 2012 மார்ச் 12 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே நடைபெற்ற ஆண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் வங்காலை சென்ஆன்ஸ் விளையாட்டக்கழகம் சம்பியனாகியுள்ளது.

முருங்கன் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நானாட்டான் டைமன் ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் வங்காலை சென் ஆன்ஸ் விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.

முதலாம் மட்ட போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் வீதம் பெற்றுக்கொள்ள போட்டி சமநிலையில் முடிவடைந்தது.
இரண்டாவது போட்டியில் சென் ஆன்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றுமொரு கோலை பெற்று முன்னனிக்கு வந்தது.

போட்டி நிறைவில் வங்காலை சென் ஆன்ஸ் விளையாட்டுக்;கழகம் 2:1 கோல்கள் என்ற அடிப்படையில் நானாட்டான் டைமன் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தை வெற்றிபெற்று பிரதேச சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.அன்புராஜ் கலந்துகொண்டார்.      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X