2025 ஜூலை 19, சனிக்கிழமை

'வெற்றிக்கான சமர்' கிரிக்கெட் போட்டி

Super User   / 2012 மார்ச் 12 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை, நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் இடையிலான  வெற்றிக்கான சமர்  20 ஓவர்  மென்பந்து கிரிக்கெட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இரண்டாவது வருடமாக  நடைபெறும் இப்போட்டி சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் ஆத்திமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் திருகோணமலை வலய கல்வி பணிப்பாளர் கி.முருகுப்பிள்ளை பிரதம அதிதியாகவும்  உடற்கல்வி உதவி கல்வி பணிப்பாளர் யாக்குப் யான் கௌரவ விருந்தினராகவும் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.

கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X