2025 ஜூலை 19, சனிக்கிழமை

மஞ்சி வெற்றிக் கிண்ண கரப்பந்தாட்ட போட்டியில் காங்கேசன்துறை இராணுவ அணி வெற்றி

Kogilavani   / 2012 மார்ச் 13 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)

வட மாகாணத்தில், ஆண்களுக்கான கரப்பந்தாட்ட அணிகளுக்கு இடையே நடைபெற்ற மஞ்சி வெற்றிக் கிண்ண கரப்பந்தாட்ட போட்டியில் காங்கேசன்துறை இராணுவ அணியினர் வட மாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மன்னர் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம்  ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இப்போட்டியில் மன்னார் ஜின்னா விளையாட்டுக் கழகமும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இராணுவ அணியும் மோதிக் கொண்டன.

ஐந்து சுற்றுக்களை கொண்ட இந்தப் போட்டியில் முதல் மூன்று நேர் சுற்றுக்களை இராணுவ அணியினர் முறையே 25 :20, 25:18, 25 : 6 புள்ளகள் என்ற அடிப்படையில் பெற்று தேசிய மட்டப் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X