2025 ஜூலை 19, சனிக்கிழமை

யாழில் கராத்தே விளையாட்டு போட்டி

Kogilavani   / 2012 மார்ச் 17 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் ஆண், பெண்களை உள்ளடக்கிய கராத்தே விளையாட்டுக் கழகங்களுக்கான கராத்தே போட்டிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணம் அடைக்கலமாதா தேவாலய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ். மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவினால் இப்போட்டி நடத்தப்படவுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ளவுள்ள விளையாட்டுக் கழகங்களை உரிய நேரத்திற்கு அடைக்கல மாதா தேவாலயத்தில் சமூகமளிக்கும்படி யாழ். மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி ஜே.எப்.எ.ரூபசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X