Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 மார்ச் 18 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கஜன்)
திருகோணமலை சாம்பல்தீவு தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் இடையே நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வெற்றிக்கின்னத்திற்கான கிரிக்கெட் போட்டியில் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயம் இரண்டாவது தடவையாகவும் வெற்றி பெற்றது.
20 ஓவர்களை கொண்ட இப்போட்டி ஆத்திமேடு தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய அணி 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டக்களையும் இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாம்பல்திவு தமிழ் மகா வித்தியாலயம் 14.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டக்களையம் இழந்து 71 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர்.
இதன் மூலம் நிலாவெளி தமிழ் மகா வித்தியாலய அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சாம்பல்திவு தமிழ் மகா வித்தியாலய்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் திருகோணமலை வலயக் கல்வி திணைக்கள விளையாட்டு உதவிக் கல்வி பணிப்பாளர் யாக்குப் ஜான் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார்.
5 minute ago
11 minute ago
15 minute ago
8 hours ago
sivanathan Monday, 19 March 2012 02:19 AM
கிராமபுற பாடசாலைகளுக்கும் முக்கியத்துவம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
15 minute ago
8 hours ago