2025 ஜூலை 19, சனிக்கிழமை

சாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 மார்ச் 22 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலைகளுககு இடையிலான விளையாட்டுப் போட்டி நேற்று புதன்கிழமை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி, சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகளிர் மகா  வித்தியாலயம், அல் ஹிலால் வித்தியாலயம், அல் ஜலால் வித்தியாலயம், அல் கமறுன் வித்தியாலயம், ஜீ.எம்.எம்.எஸ் பாடசாலை, லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயம், றியாலுல் ஜன்னா வித்தியாலயம், எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் என்பன இவ்விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டன.

இப்போட்டி நிகழ்வில், அம்பாறை மாவட்ட மோட்டார் போக்குவரத்து வாகன பரிசோதகர் பொறியியலாளர் ஏ.எல்.எம்.பாறூக் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X