2025 ஜூலை 19, சனிக்கிழமை

மட்டக்களப்பு கல்வி வலய விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு கல்வி கோட்டம் சம்பியன்

Super User   / 2012 மார்ச் 25 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார், எம்.சுக்ரி)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று கோட்டங்களுக்கிடையிலான விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு கல்வி கோட்டம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏறாவூர்பற்று கல்வி கோட்டம் 285 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும், மண்முனை பற்று கல்வி கோட்டம் 266 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலய மட்ட விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வு இன்று மாலை உடற் கல்வி ஆசிரிய ஆலோசகரும் பதில் உதவி கல்வி பணிப்பாளருமாகிய வி.லவக்குமாரின் ஏற்பாட்டில் வலய கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எ.எம்.இ.போல், மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி பணிப்பாளர் எ.பாஸ்கரன், கல்குடா வலய கல்வி பணிப்பாளர் திருமதி.சுபாசக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X