2025 ஜூலை 19, சனிக்கிழமை

முருகையா வெற்றிக்கிண்ண கரப்பந்தாட்டத்தில் விக்ரோறியாக் கல்லூரி வெற்றி

Suganthini Ratnam   / 2012 மார்ச் 26 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி வலய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே அமரர் நா.முருகையா வெற்றிக்கிண்ணத்திற்காக ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டி மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இறுதிப் போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியும் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் மோதிக்கொண்டன.

போட்டி ஆரம்பமாகிய நேரம் முதல் இரு அணிகளும் உற்சாகத்துடன் விளையாடியபோதிலும், விக்ரோறியாக் கல்லூரி இறுதி நேரத்தில் கூடிய கவனம் எடுத்து விளையாடின. 3 சுற்றுக்கள் கொண்ட இப்போட்டியில் முதல் 02 நேர் சுற்றுக்களை 25க்கு 22 26க்கு 24 புள்ளிகள் என்ற அடிப்படையில் விக்ரோறியாக் கல்லூரி  வெற்றி பெற்று வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

இதேவேளை, 19 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் சம்பினாக தெரிவு செய்யப்பட்டது.

மல்லாகம் மகா வித்தியாலயமும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியும் மோதிக்கொண்டன. மூன்று சுற்றுக்களைக்கொண்ட இப்போட்டியில் முதல் இரண்டு நோ சுற்றுக்களை இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் 25க்கு 15 25க்கு 21 என்ற புள்ளிகள் அடிப்படையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியை வெற்றி பெற்று அமரர் முருகையா வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

17 வயதுப் பிரிவு ஆண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

மல்லாகம் மகா வித்தியாலயமும் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியும் மோதிக்கொண்டன.மூன்று சுற்றுக்களைக் கொண்ட இப்போட்டியில் முதல் இரண்டு நோ சுற்றுக்களை இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் 25க்கு 15 25க்கு 21 என்ற புள்ளிகள் அடிப்படையில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியை வெற்றி பெற்று அமரர் முருகையா வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

வலிகாமம் கல்வி வலய கல்விப் பணிப்பாளர் ஆ.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டிகளில் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் கஜபதி, கிளிநொச்சி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கஜபதி பிரதீபா காயத்திரி கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக மல்லாகம் மகா வித்தியாலய அதிபர் ந.சுப்பிரமணியம், மு.குமாரகுருபரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதல்த் தடவையாக கரப்பந்தாட்டப் போட்டிகளுக்கு சுமார் 50,000  ரூபா பெறுமதியான வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சுழல் கிண்ணங்களை குமாரகுருபரன் தனது தந்தையாரின் ஞாபகார்த்தமாக வழங்கியுள்ளார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X