2025 ஜூலை 19, சனிக்கிழமை

மண்முனை வடக்கு கல்விக்கோட்டம் சம்பியன்

Menaka Mookandi   / 2012 மார்ச் 26 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி, எஸ்.வதனகுமார்)


மட்டக்களப்பு கல்வி வலய பிரிவிலுள்ள பாடசாலைகளுக்கான விளையாட்டு போட்டியில் மண்முனை வடக்கு கல்விக்கோட்டம் 1314 புள்ளிகளை பெற்று முதலிடத்தினை பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.பவளகாந்தன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாகாண கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.இ.போல், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுபா சக்கரவர்த்தி, மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன் உட்பட மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.லவக்குமார் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது நடைபெற்ற போட்டியில் 285 புள்ளிகளை பெற்று ஏறாவூர் பற்று கல்விக்கோட்டம் இரண்டாமிடத்தினையும் 266 புள்ளிகளை பெற்று மன்முனைப்பற்று கல்விக்கோட்டம் மூன்றாமிடத்தினையும் பெற்றது.

பெண்கள் பாடசாலைகளில் 207 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி முதலாம் இடத்தினையும் 139 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலை இரண்டாமிடத்தினையும் 136 புள்ளிகளை பெற்று மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

இதே போன்று ஆண்கள் பாடசாலைகளில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி 215 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தினையும் 199 புள்ளிகளை பெற்று சிவானந்தா வித்தியாலயம் இரண்டாமிடத்தினையம் 71 புள்ளிகளை பெற்று ஆரையம்பதி மகா வித்தியாலயம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக்கொண்டது.

  Comments - 0

  • sivanathan Tuesday, 27 March 2012 03:23 AM

    நேற்றைய செய்தி மட்டக்களப்பு கோட்டம் சம்பியன் என்று வெளியாகியிருந்ததே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X