2025 ஜூலை 19, சனிக்கிழமை

தேசிய கரப்பந்தாட்ட அணியில் யாழ். மஹாஜனக் கல்லூரி மாணவி

Kogilavani   / 2012 மார்ச் 31 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கரப்பந்தாட்ட அணி வீராங்கனை  ஒருவர் கிரிடா சக்தி செயல் திட்டத்தின் கீழ் இலங்கை தேசிய அணியில் இடம் பிடித்துள்ளார்.

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவியான பாலச்சந்திரன் புகழரசி என்பவரே இவ்வாறு  தேசிய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இவர் கடந்தாண்டு இலங்கை தேசிய அணியின் 19 வயதுப் பிரிவினருக்கான அணியில் இடம் பெற்றதுடன் வியட்னாமில் இடம்பெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியிலும் கலந்து கொண்டார் என்பது  குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0

  • sivanathan Sunday, 01 April 2012 11:15 PM

    வாழ்த்துக்கள். திருகோணமலையிலும் கிரிடா சக்தி தெரிவு நடைபெற்றது. எந்த வீரரும் வீராங்கனையும் தெரிவானது பற்றிய தகவல்கள் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X