2025 ஜூலை 19, சனிக்கிழமை

வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக மஞ்சல் அணி வெற்றி

Kogilavani   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட முன்னனிக் கழகங்களுக்கு இடையே இடம்பெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக மஞ்சல் அணி வெற்றிப்பெற்றுள்ளது.

யாழ். பல்கலைக்கழக விளையாட்டு அவையும் பல்கலைக்கழக வலைப்பந்தாட்ட அணியும் இணைந்து இப் போட்டியை ஒழுங்கு செய்திருந்தன.

பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் யாழ்.பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட மஞ்சல் அணியும் தெல்லிப்பளை யூனியன் விளையாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன.

போட்டியின் முதல் பாதி ஆட்டத்தில் 15:14 புள்ளிகள் என்ற நிலையில் யாழ். பல்கலைக்;கழக மஞ்சல் அணி முன்னிலையில் நின்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் 20:16 புள்ளிகள் கணக்கில் யாழ்.பல்கலைக்கழக அணி முன்னிலையில் இருந்தது. 
ஆட்ட நிறைவில் யாழ். பல்கலைக்கழக மஞ்சல் அணி 35:30 புள்ளிகள் என்ற அடிப்படையில் தெல்லிப்பளை யூனியன் அணியை வெற்றிக்கொண்டது.

மற்றுமொரு அரையிறுதி ஆட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக வலைப்பந்தாட்ட நீல அணியும் தெல்லிப்பளை யூனியன் விளையாட்டுக்கழக 'பி' அணியும் மோதிக்கொண்டன.

முதல் பாதி ஆட்ட நிறைவில் 13:7 புள்ளிகள் என்ற அடிப்படையில் தெல்லிப்பளை யூனியன் அணி முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்திலும்  11:5 புள்ளிகள் கணக்கில் தெல்லிப்பளை யூனியன் அணி முன்னிலையில் இருந்தது.

ஆட்ட நிறைவில் தெல்லிப்பளை யூனியன் விளையாட்டுக்கழக 'பி' அணி 24:12 புள்ளிகள் என்ற அடிப்படையில் யாழ்.பல்கலைக்கழக நீல அணியை வெற்றி கொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X