2025 ஜூலை 19, சனிக்கிழமை

காத்தான்குடி கோட்ட விளையாட்டு போட்டியில் மத்திய கல்லூரி முதலாமிடம்

Super User   / 2012 ஏப்ரல் 06 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


காத்தான்குடி கல்வி கோட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி 665 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்டது.

மட்டக்களப்பு மத்தி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்வி கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஇ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்இ மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம்.செயினுதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விளையாட்டு போட்டியில் காத்தான்குடி அந் - நாசர் வித்தியாலயம் 320 புள்ளிகளை பெற்று இரண்டாமிடத்தையும் 310 புள்ளிகளை பெற்று பூநொச்சிமுன இக்றா வித்தியாயலம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.

கடந்த 4 வருடங்களுக்கு பின்பு காத்தான்குடி கோட்ட மட்ட விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X