2025 ஜூலை 19, சனிக்கிழமை

'நாயகர்களின் பெரும்போர்' ; சிந்துஜன் ஹெட்ரிக் சாதனை

Super User   / 2012 ஏப்ரல் 06 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)


'நாயகர்களின் பெரும் போர்' என வர்ணிக்கப்படும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கும் சுன்னாகம்  ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் இடையிலான வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மகாஜனாக் கல்லூரி 104 ஓட்டங்களையும்  ஸ்கந்தவரோதயா கல்லூரி 132 ஓட்டங்களையும் பெற்றன.

 தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஸகந்தவரோதயாக் கல்லூரி வீரர் சிந்துஜன் தொடர்ந்து மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹெட்ரிக் சாதனை படைத்தார்.

மகாஜனாக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 31 ஓட்டங்கள் என்ற நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் நான்காவது விக்கெடடுக்காக இனைந்து கொண்ட அஜித் சாரங்கன் இணைப்பாட்டமாக 42 ஓட்டங்களை பெற்று அணியை முன்னணிலைக்கு கொண்டுவந்தார். அணித்தலைவர் அஜித் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஸ்கந்தவரோதயாக் கல்லூரி சார்பில் பந்து வீசிய சிந்துஜன் 15 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் ஜனக்சன் 26 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சஜன் 14 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரி 42.2 ஓவரில் அனைத்து விககெட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது.

கோபிநாத் 22 ஓட்டங்களையும் தூபிகன் 19 ஓட்டங்களையும் செந்தூரன் ஆட்மிழக்காமல் 15 ஜெனக்சன்  ஓட்டங்களையும் 15 சஞ்சஜன் 14 ஓட்டங்களையும் நிலக்சன் 12 ஓட்டங்களையும் பெற்றதுடன் உதிரிகளாக 18 ஓட்டங்களும் பெறப்பட்டன.
மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த அஜித் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் ஜனந்தன் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டக்களையும் ரமேஷ் 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் டிலாக்சன் 33 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய மகாஜனாக் கல்லூரி 15 ஓவர்களை சந்திக்கும் நிலையில் இருந்த போதிலும் குறிப்பி;ட்ட நேரத்தில் ரசிகர்கள் ஆதரவாளர்கள் மைதானத்தில் அடிக்கடி இறங்கி ஆட்டத்தை குழப்பியமையால்  முதல் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.  இப்போட்டி நாளை சனிக்கிழமை தொடரவுள்ளது.  






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X