2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவினரின் விளையாட்டுப் போட்டி

Kogilavani   / 2012 ஏப்ரல் 17 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

புதுவருட பிறப்பை முன்னிட்டு சுன்னாகம் பொலிஸாரால் எதிர்வரும் 19 ஆம் திகதி ஏழாலை மத்திய மகா வித்தியாலயத்தில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி ஜி.டி.ஆர் கங்கநாத் தெரிவித்தார்.

அன்றைய தினம் காலை 6 மணிக்கு சுன்னாகம் நகரிலிருந்து மரதன் ஓட்டப்போட்டியு இப் பாரம்பறிய போட்டி ஆரம்பமாகவுள்ளது.

தலையணைச்சண்டை, முட்டியுடைத்தல், சங்கீதக் கதிரை, யானைக்கு கண் வைத்தல், மெதுவான சைக்கிளோட்டம், பலூன் உடைத்தல், கிறிஸ் மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், கரப்பந்தாட்டம் போன்ற பாரிய போட்டி நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இரவு இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இப்போட்டிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குள் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X