2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கெரம் போட்டிகள்

Kogilavani   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கான  கெரம் போட்டிகள் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

வட மாகாண உடற்கல்வி கலவிப் பணிப்பாளர் மு.நிடராசா தலைமையில் ஆண், பெண் இருபாலருக்குமாக இப்போட்டிகள் இடம்பெற்றன.

இதில், பெண்களுக்கான 15 வயதுப் பிரிவு போட்டியில் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினையும், ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை இரண்டாம் இடத்தினையும், உடுவில மான்ஸ் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

இதேவேளை, பெண்களுக்கான 19 வயதப் பிரிவு போட்டியில் உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினையும் ஆனைக்கோட்டை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை இரண்டாம் இடத்தினையும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

ஆண்களுக்கான 15 வயதுப் பிரிவு போட்டியில் மான்ஸ் மகாவித்தியாலயம் முதலாம் இடத்தினையும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி இரண்டாம் இடத்தினையும், வயாவிளான் மத்திய மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

ஆண்களுக்கான 19 வயதுப் பிரிவு போட்டியில் உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தினையும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி இரண்டாம் இடத்தினையும் ஆனைக்கோடடை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X