2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

யாழ் மத்திய கல்லூரியை தோற்கடித்து நோபெல் விமலேந்திரன் கிண்ணத்தை நாலாந்தா கல்லூரி வென்றது

Super User   / 2012 ஏப்ரல் 22 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}




(கிரிசன்)

யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி கழகங்களுக்கு இடையே நடத்திய 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

  யாழ்ப்பாண பல்கலைக்கழக விளையாட்டு அவையும் கிரிக்கெட் அணியும் இனைந்து நடத்திய கழகங்களுக்கிடையிலான 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.
இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிரிக்கெட் அணியும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழக அணியும் நேற்று சனிக்கிழமை மோதின.

 முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 281 ஓட்டங்களைப் பெற்றது. தசாரிதன் 69  ஓட்டங்களையும் ஜனார்த்தனன் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த ரதீஸ் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் லவேந்திரா 48 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் அகிலன் 34 ஓட்டங்களுக்க 2 விக்கெட்டுக்களையும் மயூரன் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 282 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழக அணி 48.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

 டக்சன் 48 ஓட்டங்களையும் லவேந்திரா 41  ஓட்டங்களையும் குமணன் 36 ஓட்டங்களையும்   விதுரன் 35  ஓட்டங்களையும் மயூரன் 32 ஓட்டங்களையும்  பெற்;றனர். உதிரிகளாக 52 ஓட்டங்கள் பெறப்பட்டன.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்ததைச் சேர்ந்த  விதுபாலா 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும் ஜனார்த்தனன், விதுரன், தசாரிதன் முறையே 33, 34, 35 ஓட்டங்களைக்கொடுத்து தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக பி.ரவீந்திராவும் தொடரின் ஆட்டநாயகனாக ஆர். தசரீதனும் தெரிவு செய்யப்பட்டனர்.  சிறந்த துடுப்பாட்ட வீரராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆh.தசாரிதனும்  சிறந்த பந்து வீச்சாளராக வி.விதுபாலாவும் சிறந்த களத்தடுப்பாளராக யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எ.அன்புஜன்  தெரிவு செய்யப்பட்டார்கள்.     






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X