2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கிரிக்கெட் கழகம் சம்பியன்

Menaka Mookandi   / 2012 ஏப்ரல் 28 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய 50 ஓவர் சுற்றுப் போட்டியில் சைமன்ட்ஸ் கழகத்தை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கிரிக்கெட் கழகம் 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

சனிக்கிழமை 28 முற்றவெளி மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய சைமண்டஸ் கழகம் 30.1 பந்து பரிமாற்றங்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

கௌமாறன் 29, அலெக்ஸ் 28, பௌமி 28 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் கார்த்திக் 7 பந்து பரிமாற்றத்தில் 15 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களைப் பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு  விளையாட்டி ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி கிரிக்கெட் கழகம் 29.4 பந்து பரிமாற்றத்தில் 3 விக்கட்டுக்ளை இழந்து 147 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றது.

அருச்சுணா ஆட்டம் இழக்காமல் 42, தர்சிதன் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களைப் பெற்று வெற்றிக்கு  வழி சமைத்தனர்.  சுதர்சன் 16, கமிலஸ்பிரியானந்த் 21, ரவிவர்மன் 16 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X