2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

ரக்பி போட்டியில் திருத்துவக் கல்லூரி வெற்றி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)

கண்டி திருத்துவக் கல்லூரிக்கும் கண்டி புனித அந்தோனியார் கல்லூரிக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை கண்டி நித்தவெல ரக்பி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ரக்பி போட்டியில் 54க்கு  10 என்ற புள்ளிகள்  வித்தியாசத்தில் கண்டி திருத்துவக் கல்லூரி வெற்றி  பெற்றது.

இலங்கை ரக்பி சம்மேளனம் மற்றும் பாடசாலை ரகர் சம்மேளனம் இணைந்து பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி போட்டித் தொடரை நடத்துகின்றது.

திருத்துவக் கல்லூரி அணி இடைவேளைக்கு முன்னர் 25 புள்ளிகளை பெற்ற அதேவேளை,  புனித அந்தோனியார் கல்லூரி 05 புள்ளிகளை பெற்றது.

போட்டியின் முடிவின்போது திருத்துவக் கல்லூரி 54 புள்ளிகளை பெற்றது. அந்தோனியார் கல்லூரி 10 புள்ளிகளை பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X