2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மட்டு. மேற்கு கல்வி வலயத்தின் விளையாட்டு போட்டி

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு மேற்கு பகுதியில் 66 பாடசாலைகளை உள்ளடக்கிய  புதிதாக உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் முதலாவது வலயமட்ட விளையாட்டுப் போட்டியின் இறுதி விழா நேற்று சனிக்கிழமை  மகிழடித்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றது.

சிரேஷ்ட  உடற்கல்வி ஆசிரியர் எஸ்.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போட்டியில் ஆண்களுக்கான குழு விளையாட்டு போட்டியில் 38 புள்ளிகளை பெற்று மட்/கன்னங்குடா வித்தியாலயம் முதலாம் இடத்தினையும் 28 புள்ளிகளை பெற்று மட்/அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயம் இரண்டாம் இடத்தினையும் 27 புள்ளிகளை பெற்று மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

பெண்களுக்கான குழு போட்டியில் 38 மட்/அம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயம் முதலாம் இடத்தினையும் 36 புள்ளிகளை பெற்று மட்/கன்னங்குடா வித்தியாலயம் இரண்டாம் இடத்தினையும் 22 புள்ளிகளை பெற்று மட்/அரசடிதீவு விக்னேஸ்வரா வித்தியாலம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

மெய்வல்லுனர் போட்டியில் 1 – 5 வகுப்புகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 10 புள்ளிகளை பெற்று குறிஞ்சாமுனை அ.த.க.பாடசாலை முதலாம் இடத்தினையும் மாவிலையாறு கைலன் வித்தியாலம் 5 புள்ளிகளை பெற்று இரண்டாம்; இடத்தினையும் பெற்றுக் கொண்டது.  1 - 5 வகுப்புக்களுக்குட்பட்ட பாடசாலைகளில் 103 புள்ளிகளை பெற்று கடுக்காமுனை வித்தியாலயம் முதலாம் இடத்தினையும்  75 புள்ளிகளை கொக்கட்டிச்சோலை ஆர்.கே.எம்.வித்தியாலயம் இரண்டாம் இடத்தினையும்  காயன்குடா கண்ணகி வித்தியாலம் 53 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.  1 – 13 வகுப்புகளுக்குட்பட்ட பாடசாலைகளில் 257 புள்ளிகளை பெற்று மட்/கன்னங்குடா வித்தியாலயம் முதலாம் இடத்தினையும் 176 புள்ளிகளை பெற்று மட்ஃஅம்பிலாந்துறை கலைமகள் வித்தியாலயம் இரண்டாம் இடத்தினையும்  142 புள்ளிகளை பெற்று மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா வித்தியாலம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் பிரதிச் செயலாளரான எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எ.எம்.ஈ.போல், வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன், திருமதி புள்ளநாயகம், திருமதி சுபாசக்கரவர்த்தி, ஜனாப் ஜெயநூர்டீன் ஆகியோர் இவ்விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X