2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

'ஜொயின்ட் ஹென்ட்ஸ்' கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பெர்போமன்ஸ் அணி வெற்றி

Kogilavani   / 2012 மே 06 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

திருகோணமலை உயர் தொழில்நுட்ப நிறுவனத்தினால் 'ஜொயின்ட் ஹென்ட்ஸ்' என்ற பெயரில் நான்காவது தடவையாக நடத்தப்படும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி நேற்று சனிக்கிழமை ஏகாம்பரம் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிறுவனத்தில் கல்வி பயிலும் தற்போதைய மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கம் இடையில் தனித்தனியாக நடைபெற்றப் போட்டியில் இறுதி போட்டிக்கு பழைய மாணவர் அணியைச் சேர்ந்த புரமோட்டர் அணியும் பெர்போமர் அணியும் மோதிக்கொண்டன.

முதலில் துடுப்பெடுத்தாடிய பெர்போமன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இவ் அணியில், ஏ.சிவசந்துரு 50 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இம்ரான் 3  ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புறமோட்டர்ஸ் அணி  9 விக்கட்டுக்களை  இழந்து 123  ஒட்டங்களை மாத்தரம் பெற்றுக்கொண்டது. இவ் அணியில் மதன் 42 ஒட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். 

சங்கர்சன் 3 ஓவர்கள் பந்து வீசி 21 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை  கைப்பற்றினார். இச் சுற்றுப் போட்டியில் சிறந்த பந்து வீச்சாளராக பெர்போமன்ஸ் அணியைச் சேர்ந்த  அலி இம்ரானும், போட்டி நாயகனாக பெர்போமன்ஸ் அணியைச் சேர்ந்த ஏழுமலை சிவசந்துருவும், சுற்றுப்போட்டி தொடர் நாயகனாக புறமோட்டர்ஸ் அணியைச் சேர்ந்த சந்திரவதனன் டிலீப்குமாரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இப்போட்டி நிகழ்வுக்கு கல்லூரி பணிப்பாளர் கே.வீமராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X