2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

எல்லேப் போட்டியில் யாழ். பல்கலை தேசிய இளைஞர் சங்க விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவு

Suganthini Ratnam   / 2012 மே 06 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

நல்லூர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றங்களுக்கு இடையே நடைபெற்ற ஆண்களுக்கான எல்லேப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தேசிய இளைஞர் சங்க விளையாட்டுக் கழகம் பிரதேச செயலக சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில்  பல்கலைக்கழக தேசிய இளைஞர் மன்ற விளையாட்டுக் கழகமும் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் தேசிய இளைஞர் மன்ற  விளையாட்டுக்கழகமும் மோதின. 40 பந்துகளுக்கு மட்டுப்படுத்திய போட்டியாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் 40 பந்துகளில் அனைவரும் ஆட்டமிழந்து  02 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

03 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய பல்கலைக்கழக அணி 24 பந்துகளில் 03 ஓட்டங்களை 06 பேர் ஆட்டமிழந்த நிலையில் பெற்று நல்லூர் பிரதேச செயலக தேசிய இளைஞர்கழகத்தின் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X