2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

கிரிக்கெட் போட்டியில் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றி

Kogilavani   / 2012 மே 07 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)
யாழ். ஜொலி ஸ்ரார் விளையாட்டுக் கழகம், யாழ்.மாவட்ட கிரிக்கெட் விளையாட்டுக்  கழகங்களுக்கு இடையே இடம்பெற்ற 30 ஓவர்கள் கொண்ட போட்டியில் யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாய்pற்றுக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தெல்லிப்பளை யூனியன்ஸ் விளையாட்டுக் கழகம் 30 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றது.

இவ் அணியில் ஜான்சன் 7 நான்குகள், 2 ஆறு ஓட்டங்கள் உள்ளடங்களாக 69 புள்ளிகளையும் யுவராஜ் 38, சதீஸ்கண்ணா 30, பிரசாந்தான் 26, வைகுந்தன் 21 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 17 ஓட்டங்களும் பெறப்பட்டன.

ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த லவேந்திரா விதுசன் முறையே தலா 6 ஓவர்கள் பந்து விசி முறையே 44 ஓட்டங்களைக் கொடுத்து தலா 2 விக்கெட்டுக்களையும் அகிலன் காண்டீபன் தலா 6 ஓவர்கள் பந்து விசி முறையே 23, 44 ஓட்டங்களை கொடுத்து தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

207 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகம் 23 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இவ்வணியில், ரஜீந்திரன் 54, காண்டீபன் 41, குமணன் கஜீவன் தலா 34 ஓட்டங்களை பெற்றதுடன் உதிரிகளாக 15 ஓட்டங்களும் பெறப்பட்டன.

ஜொனியன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த டக்சயன் 5 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் சுகிர்தன், வைகுந்தன், யுவராஜ் முறையே 14, 15, 26, ஓட்டங்களைக் கொடுத்து தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X