2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மாவட்ட கராத்தே போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வெற்றி

Menaka Mookandi   / 2012 மே 07 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரி.லோஹித்)


விளையாட்டுத்துறை அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடத்தவுள்ள பிரதேச செயலங்களுக்கிடையிலான மாவட்ட விளையாட்டுப்போட்டியின் முதல் போட்டியாக கராத்தே போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு சென்.மைக்கல் கல்லூரியி;ன் உள்ளக அரங்கில் மட்டக்களப்பு விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற ஆரம்ப வைபவத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன், மட்டக்களப்பு மகஜன கல்லூரி அதிபர் திருமதி கனகசிங்கம் ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து எட்டுப்பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து ஆண்கள் பெண்களைக்கொண்ட எட்டு அணிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டதுடன் இந்த போட்டிக்கான நடுவகத்தை சோட்டாக்கன் சங்க போசகர் கே.ரி.பிரகாஸ் மாஸ்டர் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் இடம்பெற்ற போட்டிகளில் மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான சம்பியனாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இடத்தினை செங்கலடி பிரதேச செயலகமும் மூன்றாம் இடத்தை கிராண் பிரதேச செயலகமும் நான்காம் இடத்தினை ஆரையம்பதி பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X